மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூர்

நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் சுகாதாரத்துறையின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் மரவாபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். மேலும், தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசோதனைகளை செய்து உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.


Next Story