மருத்துவ முகாம்
அம்பை அருகே மருத்துவ முகாம் நடந்தது.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் அடையகருங்குளம் ஊராட்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பிரவின் குமார் ஆலோசனைபடி துணைத் தலைவர் மதன கிருஷ்ணன் தலைமையில் ஊராட்சி செயலர் சுரேகா ஏற்பாட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. 70-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரையின் அளவு பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது, சுகாதார ஆய்வாளர் ஆனந்த் பொன்சிங், கிராம சுகாதார செவிலியர் லதா, சண்முகதாய் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். தொடர்ந்து மலேரியா தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story