மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள சின்னாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில் மோகன் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் அறிவழகன், ஜெயலட்சுமி தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இருதய நோயை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story