மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x

நெல்லை டவுனில் மருத்துவ முகாம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் திருவள்ளுவர் தெரு தர்மராஜா தொடக்கப்பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். மேயர் பி.எம்.சரவணன், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலை ராஜா, மாநகர தி.மு.க செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் டாக்டர்கள் குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து கண் சிகிச்சை, பல், தோல் நோய் மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.


Next Story