சிறப்பு மருத்துவ முகாம்
திருமுல்லைவாசலில் சிறப்பு மருத்துவ முகாம் 24-ந்தேதி நடக்கிறது
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் 24-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. முன்னாள் முதல்- அமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் இந்தமுகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி. பரிசோதனை மற்றும் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, ரத்த பரிசோதனை ஆகியவை இலவசமாக அளிக்கப்படும்.. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும். சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும். இந்த தகவலை கலெக்டர் மகாபாரதி தெரிவித்து உள்ளார்.