மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 2 July 2023 12:30 AM IST (Updated: 2 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் பேரூராட்சியில் மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் உத்தரவின் பேரில், முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அட்சரா தலைமையிலான மருத்துவ குழுவினர் சாத்தான்குளம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள், சுய உதவி குழு துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. பேரூராட்சி எழுத்தர் கிங்ஸ்டன், ஆறுமுகம் கிராம சுகாதார செவிலியர் பெர்னத், சுகாதார ஆய்வாளர் அருண், மக்களை தேடி மருத்துவ செவிலியர் பவித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ஐலின் சுமதி, சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், பேரூராட்சி தலைவி ரெஜினி ஸ்டெல்லாபாய், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா ஆகியோர் செய்திருந்தனர். இதேபோன்று சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


Next Story