கம்பத்தில் மருத்துவ முகாம்


கம்பத்தில் மருத்துவ முகாம்
x

கம்பம் அரசு மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடந்தது

தேனி

கம்பம் அரசு மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடந்தது நோயாளிகளுடன் வருபவர்கள் இரவில் தங்குவதற்கு வசதியாக மத்திய அரசின் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனை வளாகத்தில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக மொத்தம் 50 படுக்கை வசதிகளுடன் விடுதி கட்டப்பட்டது. தற்போது அவை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நியைில் வீடு இல்லாதவர்கள் இரவு நேரத்தில் இந்த விடுதியில் தங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, உலக வீடற்றோர் தின நிகழ்ச்சி, வீடற்ற பயனாளிகள் சேர்க்கை மற்றும் மருத்துவ முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கம்பம் நகராட்சி தலைவர் வனிதாநெப்போலியன் தலைமை தாங்கினார். துணைத்தலைர் சுனோதா செல்வக்குமார், நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வீடு இல்லாதவர்களுக்கு இரவில் தங்குவதற்கான சேர்க்கை மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. இதில் டாக்டர் மீனாட்சி சுந்தரம், பொறியாளர் பன்னீர்செல்வம், சுகாதார அலுவலர் அரசக்குமார், கட்டிட ஆய்வாளர் சலீம், சமுதாய அமைப்பாளர் ரஞ்சிதம், குண சுந்தரி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story