Normal
தூத்துக்குடி வஉசி கல்லூரியில் மருத்துவ முகாம்

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, பற்கள் குறித்த பரிசோதனை மற்றும் செவித்திறன் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் 160 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்டீபன் பிச்சைமணி, எஸ்.முத்துசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story






