மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
கீழ்வேளூர் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
சிக்கல்:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவ முகாம் கீழ்வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமினை நாகை மாலி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் டாக்டர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும், புதுப்பித்தல்,யூ.டி.ஐ.டி. அட்டை பதிவு செய்தல், நவீன மருத்துவ உபகரணங்கள், மாத பராமரிப்பு உதவி தொகை, கல்வி உதவி தொகை போன்றவைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஈ.சி.ஜி, பல் மருத்துவம், காது குறைபாடுகளை எளிதில் கண்டறியும் ஆடியோ மெட்ரிக் முறை, மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர். சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.