மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
x

பெரணமல்லூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் பெரணமல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், குணசேகரன், அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார மேற்பார்வையாளர் ராஜா வரவேற்றார்.

முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 வீல் சேர், ஒரு நடை வண்டியும், 54 பேருக்கு அடையாள அட்டை, 170 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இதில் காது, கண், எலும்பு முறிவு, குழந்தை நலம், மனநலம், தசை பயிற்சி உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். .

இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் இசையருவி, சரவணகுமார், மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுகந்தி நன்றி கூறினார்.

1 More update

Next Story