தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
வால்பாறை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்க ளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஆயுள் காப்பீடு திட்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். மேலாளர் சலாவுதீன் வரவேற்றார். முகாமை தொடங்கி வைத்து ஆணையாளர் பாலு பேசும் போது, தூய்மை பணியாளர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ள வேண்டும். அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
முகாமில், தூய்மை பணியாளர்களுக்கு ரத்தம், சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து பணியாளர்களும் காப்பீடு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் விபத்து காப்பீடு, ஓய்வூதிய காப்பீடு திட்டங்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் ஆகியவை குறித்து விளக்கி கூறப்பட்டது. மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார பணியாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் விளக்கி கூறினர்.
இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ், சமுதாய ஒருங்கிணைப்பாளர் வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.