பயிற்சி பெண் போலீசாருக்கு மருத்துவ முகாம்
வேலூர் கோட்டையில் பயிற்சி பெண் போலீசாருக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர்
வேலூர் கோட்டையில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் 2-ம் நிலை பயிற்சி பெண் காவலர்கள் 285 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. பயிற்சி பள்ளி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் முன்னிலை வகித்தனர். முதன்மை சட்ட போதகர் கனிமொழி வரவேற்றார்.
ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை டாக்டர் கீர்த்தனா தலைமையிலான குழுவினர் காவலர்களை பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களுக்கு கண் பரிசோதனை, இ.சி.ஜி., ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story