நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம்


நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம்
x

ஆரணியில் நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

கைத்தறி துறை மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துவ துறை இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானத்தில் உள்ள பட்டு மகாலில் நடந்தது.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.. சுபான்ராவ் பேட்டை திருப்பூர் குமரன் கைத்தறி கூட்டுறவு சங்க தலைவர் தங்கதுரை, ஆரணி தயாளம்மாள் கூட்டுறவு சங்க தலைவர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத், ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

முகாமை ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சிவானந்தம், தயாநிதி, திறன் மேம்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.எஸ்.அன்பழகன், விண்ணமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி.ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முகாமில் கண், ரத்த அழுத்தம், பொது மருத்துவம், குழந்தை நலம், காது, மூக்கு, தொண்டை, தோல் உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சம்பந்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

இதில் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் உள்ள நெசவாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர்.


Related Tags :
Next Story