மக்களை தேடி மருத்துவ முகாம்
மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.
கரூர்
நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்றனர்.பின்னர் வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
Related Tags :
Next Story