மக்களை தேடி மருத்துவ முகாம்
மக்களை தேடி மருத்துவ முகாம்
சுல்தான்பேட்டை
தமிழகத்தில் மக்களை தேடி சென்று மருத்துவ சேவையை வழங்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் திட்டத்தை கிராமங்கள்தோறும் கொண்டு சேர்க்கும் பணியில் சுகாதாரத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிபுத்தூரில் மக்களை தேடி மருத்துவ திட்ட முகாம் நடைபெற்றது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகளுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, காச நோய் உள்பட பல்வேறு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். மேலும் உடல்நலன் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.