கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணராயபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி தலைமை வகித்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து ெபட்டகங்களை வழங்கி பேசினார்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழுத்தலைவர் சுமித்ராதேவி முன்னிலை வகித்தார். பஞ்சப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் நிறைமதி வரவேற்று பேசினார்.முகாமில் பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், முதியோர் மருத்துவம், மகப்பேறு, ஸ்கேன், காது, மூக்கு, தொண்டை, கண், தோல், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இதில், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, நகர செயலாளர்கள் சசிகுமார், மோகன்ராஜ், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேதுமணி, துணைத்தலைவர் வளர்மதி, செயல் அலுவலர் யுவராணி மற்றும் பலர்கலந்து கொண்டனர். கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட தென்கரை வாய்க்காலில் புதிய படித்துறை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், சிவகாமசுந்தரி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு படித்துறையை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.