மருத்துவத்துணி விற்பனையாளர்கள் சங்க கூட்டம்


மருத்துவத்துணி விற்பனையாளர்கள் சங்க கூட்டம்
x

மருத்துவத்துணி விற்பனையாளர்கள் சங்க மகாசபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வட்டார மருத்துவத்துணி விற்பனையாளர்கள் சங்க மகாசபை கூட்டம் தலைவர் செந்தில்வேல்குரு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் துணைத்தலைவர் தங்கமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு சரி பார்த்து ஒப்புதல் பெறப்பட்டது. சங்க உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை செயலாளர் ஆறுமுகக்கனி வாசித்தார். இதில் நிர்வாகிகள், கமிட்டியினர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் துணைச்செயலாளர் ஆனந்தமுருகன் நன்றி கூறினார்.



Next Story