பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.18 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்; கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி அரசு பொது ஆஸ்பத்திரிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சம் மதிப்பில் யூ.எஸ்.ஜி. ஸ்கேன் கருவி மற்றும் டயாலிசிஸ் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ உபகரணங்களை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, பேரூராட்சி செயல் அலுவலர் கலைவாணி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், பசுபதி, மதிவாணன், முருகன், நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பழனி, செல்வம், மகாலிங்கம், நகர செயலாளர்கள் தென்னரசு, சந்தோஷ், பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story