மருத்துவ பரிசோதனை முகாம்
மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் உள்ளாட்சி நிர்வாகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வட்டார அளவிலான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவக்குழுவினர் என்.புகழூர் கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய 4 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் என அனைவருக்கும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறித்து பரிசோதனை செய்தனர். மேலும் சளி, இருமல் உள்பட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளும் செய்யப்பட்டது. மேலும் உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.