சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை


சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது

சிவகங்கை

திருப்புவனம்

மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தியில் சுங்கச்சாவடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று திருப்பாச்சேத்தியில் நடைபெற்றது. மானாமதுரை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருந்து மருத்துவ பொறுப்பாளர் டாக்டர் ராஜராஜன் தலைமையில் 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு பரிசோதனை செய்தனர்.

இதில் 30 பணியாளர்கள் கலந்து கொண்டனர். பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ. முக்கியத்துவம், தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை சுங்கச்சாவடி மனிதவளம் மேலாண்மை அதிகாரி சீனிவாசன், சுங்கச்சாவடி பொறுப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

1 More update

Next Story