மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்


மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேளாக்குறிச்சியில் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்.

தியாகதுருகம் அருகே வேளாக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆயுஷ்மான் பாரத் மற்றும் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராணி எத்திராஜ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணை தலைவர் சுகந்தி ஆனந்தன் முன்னிலை வகித்தார். இதில் திட்ட மேற்பார்வையாளர் சுதாகணேஷ் மேற்பார்வையில் மருத்துவ காப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. முகாமில் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீடு செய்து கொண்டனர். இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராசு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story