நம்பியாற்றில் மூழ்கி மருத்துவ மாணவர் பலி


நம்பியாற்றில் மூழ்கி மருத்துவ மாணவர் பலி
x

திருக்குறுங்குடி நம்பியாற்றில் மூழ்கி மருத்துவ மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி நம்பியாற்றில் மூழ்கி மருத்துவ மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ மாணவர்

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஜோஸ். இவருடைய மகன் ஜோயல் (வயது 24). இவர் நெல்லை மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஜோயல் தன்னுடன் படிக்கும் மாணவ-மாணவிகள் 10-க்கும் மேற்பட்டவர்களுடன் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

ஆற்றில் மூழ்கி பலி

பின்னர் அவர்கள் கோவிலையும் தாண்டி, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்கு சென்று நம்பியாற்றில் குளித்ததாக கூறப்படுகிறது. ஆற்றில் குளித்துக் கொண்டு இருக்கும் போது, ஜோயல் திடீரென்று நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சக மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடல் மீட்பு

அந்த சமயத்தில் அந்த பகுதியில் ரோந்து சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் இதை பார்த்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும், திருக்குறுங்குடி போலீசுக்கும், நாங்குநேரி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி, சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியான ஜோயல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருக்குறுங்குடி நம்பியாற்றில் மூழ்கி மருத்துவ மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story