"உயிரை காப்பதற்குத்தான் மருத்துவப் படிப்பு; மாய்த்துக் கொள்வதற்கு இல்லை" - தமிழிசை சவுந்தரராஜன்


உயிரை காப்பதற்குத்தான் மருத்துவப் படிப்பு; மாய்த்துக் கொள்வதற்கு இல்லை - தமிழிசை சவுந்தரராஜன்
x

பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.

சென்னை,

தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நீட் தேர்வில் தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் குறித்து பேசிய அவர், தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று கூறினார்.

உயிரை காப்பதற்குத்தான் மருத்துவம் படிக்க வேண்டுமே தவிர உயிரை மாய்த்துக் கொள்வதற்கு இல்லை என்று குறிப்பிட்ட அவர், பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

1 More update

Next Story