கள்ளழகர் கோவில் யானைக்கு மருத்துவ குழு பரிசோதனை


கள்ளழகர் கோவில் யானைக்கு மருத்துவ குழு பரிசோதனை
x

கள்ளழகர் கோவில் யானைக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்

மதுரை

அழகர்கோவில்,

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருவது சுந்தரவல்லி தாயார் யானை. இந்த கோவில் யானை காலமுறைபடி, கால்நடை மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று மாவட்ட வளர்ப்பு யானைகள் நலம் மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவர் மாவட்ட வன அலுவலர் குருசாமி, மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் பழனியப்பன், கால்நடை மருத்துவர் உமா மகேஸ்வரி, அறநிலைய துறை உதவி ஆணையர் செல்வி ஆகியோர் கொண்ட குழுவினர் பரிசோதனை செய்து ஆய்வு நடத்தினர். அப்போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர். முன்னதாக சுந்தரவல்லி யானையை பரிசோதித்த குழுவினர், பராமரிப்பு வழி முறைகள், உணவு வழங்குவது, நடைபயிற்சி, பாதுகாப்புடன் இருப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.


Next Story