கைதான 3 பேருக்கு மருத்துவ பரிசோதனை

கைதான 3 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
பரமக்குடியில் பள்ளி மாணவி ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணி, அவருடைய நண்பர் ராஜா முகமது மற்றும் பரமக்குடி புதுநகர் பிரபாகரன் ஆகியோரை போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று கைதான 3 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர்.
அங்கு மருத்துவ குழுவினர் 3 பேருக்கும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனை முடிந்து நேற்று இரவு 3 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story






