தற்கொலை முயற்சி போராட்டம் நடத்திய விவசாயிகள்
கணியூரில் சாலையோரங்களில் சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் வகையில் மருத்துவக் கழிவுகள் மற்றும் கோழிக்கழிவுகள்
மூலனூர்
மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதாங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. அந்த அணைக்கு நிலம் கொடுத்த உரிய இழப்பீடு வழங்க கோரி கோனரிபட்டியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 28-வது நாளாக நடந்த காத்திருப்பு பந்தலில் விவசாயிகள் ரோடு ரோலர் முன்பாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ேபாராட்டம் குறித்து குறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் கூறும்போது " அனைக்கு கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். நீதிமன்றம் தீர்ப்பு வந்தும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வழக்கை மேல் முறையீடு செய்துள்ளனர். எனவே மேல் முறையீட்டை திரும்ப பெற வலியுறுத்தி ரோடு ரோலர் முன்பாக எங்களை நசுக்கி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக போராட்டம் நடத்துகிறோம் என்றார்.