பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகள் அகற்றம்


பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகள் அகற்றம்
x

பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டன.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் வளாகத்தில் புதிய கட்டிடத்தின் அருகே மருத்துவமனையில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள், மருத்துவ கழிவுகள், வீணாகும் உணவு பொருட்கள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் தூர்நாற்றம் வீசியததோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. அந்த சாலை வழியாக செல்பவர்களும், அருகே மருத்துவமனை புதிய கட்டிடத்தில் உள்ள நோயாளிகள், மருத்துவமனைக்கு வருபவர்களும், அருகே உள்ள பள்ளி, அம்மா உணவகம், பஸ் நிறுத்தம், வணிக நிறுவனங்களுக்கும் செல்பவா்களும் மூக்கை பிடித்தவாறு சென்றனர். மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்பட்ட குப்பைகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவைகளை உடனே அகற்ற கோரியும், மருத்துவமனை வளாகத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், மருத்துவ கழிவுகளை உடனுக்குடன் அகற்ற கோரியும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கை தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் நேற்று பொதுமக்கள் பேட்டிகளுடன் செய்தி வெளியானது. இதனை கண்ட சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினரும், நகராட்சி நிர்வாகமும் மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள், மருத்துவ கழிவுகளை பொக்லைன் எந்திரம் உதவியுடன் அள்ளி அகற்றினர். இதற்கு நடவடிக்கை எடுத்த மருத்துவமனை அலுவலர்களுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.


Next Story