குறைந்தபட்ச ஊதியம் வழங்க மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை
குறைந்தபட்ச ஊதியம் வழங்க மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் அமைப்பு கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சிவானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். களப்பணியாளர்களின் பணிகளை வரையறை செய்து ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். பயண படியை மீண்டும் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் மாவட்ட தலைவராக பேபியும், செயலாளராக செல்வியும், பொருளாளராக வேணியும் மற்றும் துணைத் தலைவர்கள், துணை செயலாளர் அகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story