மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ரீனா தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாரி, தலைவர் காங்கேயன், பொருளாளர் முரளி, துணைத்தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் பெண்கள், தன்னார்வலர்களை ஊழியராக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு ரூ.26 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்தும், தற்போது வழங்கும் ஊக்கத்தொகையை நேரடியாக ஊழியர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
ஊக்கத் தொகையை மாதாமாதம் தாமதமின்றி வழங்க வேண்டும். பயணப்படி, உணவுப்படி, மலையில் பணியாற்றுவோருக்கு சிறப்புப்படி வழங்க வேண்டும். ஊழியருக்கு பேறுகால சலுகை வழங்க வேண்டும்.
ஊழியர் திறன்வளர்க்கும் பயிற்சி அளித்து சான்றுகள் வழங்க வேண்டும். கவுரவமான பணிசூழலை ஏற்படுத்த வேண்டும்.
அரசே அனைவருக்கு சீருடை, அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.