மருத்துவ குணம் வாய்ந்த ஆவாரம் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன


மருத்துவ குணம் வாய்ந்த ஆவாரம் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன
x

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மருத்துவ குணம் வாய்ந்த ஆவாரம் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மருத்துவ குணம் வாய்ந்த ஆவாரம் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

பூத்துக்குலுங்கும் ஆவாரம் பூக்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் புள்ளி மான், முயல், குரங்கு, காட்டு பன்றி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன.

இந்த நிலையில் தற்போது வனவிலங்கு சரணாலயத்தில் மருத்துவ குணம் உள்ள ஆவாரம் பூக்கள் பூத்துக்குலுங்குகிறது. இதனால் சரணாலயத்தில் எங்குபார்த்தாலும் மஞ்சள் நிளத்தில் வண்ண மயமாக காட்சி அளிக்கிறது.

மருத்துவ குணம் வாய்ந்தது

மருத்துவ குணம் வாய்ந்த இந்த ஆவாரம் பூக்களை வெயிலில் உலர்த்தி பொடி செய்து, இதனுடன் தேவையான அளவு மிளகு, ஏலக்காய், கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

கல்லீரல் பிரச்சினை சரியாகும். குழந்தை இல்லாத பெண்கள் இதன் பூக்களை கருப்பட்டி உடன் சேர்த்து அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பை பிரச்சினை நீங்கும்.

அதிக அளவில் பறித்து செல்கின்றனர்

ஆவாரம்பூக்களை தயிர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி பொலிவுடன் காணப்படும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த பூக்களை தொடர்ந்த பயன்படுத்த கூடாது என்று தெரிவித்தனர்.இதனால் இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பறித்து செல்கின்றனர்.


Next Story