ஓசூரில்பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


ஓசூரில்பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். இதில், மாவட்ட செயலாளர்கள் பிரவீண்குமார், ராஜசேகர், மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் மனோகர், அன்பரசன், விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கட்சியின் சார்பில் வருகிற 23-ந் தேதி அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற வார்டுகளிலும், விலைவாசி உயர்வு, அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கவேண்டும், டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்தும் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை, பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


Next Story