அரசு போக்குவரத்து கழகஅண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தர்மபுரி:
தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் தாடி ராசு, மாநில பொருளாளர் அப்துல் ஹமீது, எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி,சம்பத்குமார், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், போக்குவரத்து பிரிவு தர்மபுரி மண்டல செயலாளர் லட்சுமணன், தலைவர் சிவம், பொருளாளர் முனிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு சங்க நிர்வாகிகள் மற்றும்உறுப்பினர்களுக்கு கை கெடிகாரங்களை வழங்கி தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாட்டில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூட்டுறவு பணியாளர் சங்க மாநிலச்செயலாளர் சின் அருள்சாமி, மண்டல மின்சார பிரிவு தலைவர் சாந்தமூர்த்தி, அ.தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், கோபால், பசுபதி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.