டிராக்டர், லாரி டிரைவர்கள் விழிப்புணர்வு முகாம்
நாமக்கல்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஆவத்திபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஓடப்பள்ளி சர்க்கரை ஆலை டிராக்டர், லாரி டிரைவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. மோட்டார் வாகன அலுவலர் பூங்குழலி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். பொன்னி சர்க்கரை ஆலை நிர்வாகி பாலகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டிராக்டர், லாரி டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், எச்சரிக்கையுடன் ஓட்டுவது, கரும்பு லோடு ஏற்றி வரும்போது சாலையில் பள்ளங்களை கவனித்து வாகனங்களை ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட டிராக்டர், லாரி டிரைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story