தாரமங்கலத்தில்தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி பங்கேற்பு


தாரமங்கலத்தில்தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி பங்கேற்பு
x
சேலம்

தாரமங்கலம்

தாரமங்கலம் நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம். நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம். 15-வது மானிய நிதி குழு. மாநில நிதிக்குழு ஆகிய திட்டங்களின் கீழ் சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.7்.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நுண்உயிர் உரமையம் ரூ.69 லட்சத்திலும். சிறுவர் விளையாட்டு பூங்கா ரூ.47 லட்சத்திலும் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய பல்வேறு திட்டப்பணிகள் குறித்த சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாரமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாரமங்கலம் நகராட்சி தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம். செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். தாரமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் சின்னு என்ற அர்த்தநாரீஸ்வரர், தாரமங்கலம் நகராட்சி துணைத்தலைவர் தனம், துணை செயலாளர்கள் செல்வமணி, பழனிசாமி, துரைசாமி, அவைத்தலைவர் சண்முகசுந்தரம், நகராட்சி உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story