பாலக்கோடு பேரூராட்சி கூட்டம்


பாலக்கோடு பேரூராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 2 Sept 2023 1:00 AM IST (Updated: 2 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் முரளி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு-செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது. மழைக்காலங்களில் சாலை மற்றும் தெருக்களின் ஓரம் தேங்கும் கழிவுநீரை அகற்றுவதற்காக மத்திய ஸ்வச்சபாரத் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாகனம் மற்றும் குப்பைகளை அள்ளி செல்ல தானியங்கி வாகனம் வாங்கவும், கழிவுநீர் கால்வாய் இல்லாத பகுதிகளில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைப்பது பழுதடைந்த சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை புனரமைப்பது, 18 வார்டுகளிலும் விடுபட்ட குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், தலைமை எழுத்தர் அபுபக்கர் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் துணைத்தலைவர் தாஹசீனா இதயத்துல்லா நன்றி கூறினார்.

1 More update

Next Story