பாலக்கோட்டில்தி.மு.க. வாக்குசாவடி முகவர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்றார்
பாலக்கோடு:
பாலக்கோட்டில் தி.மு.க. மத்திய ஒன்றியம் மற்றும் பேரூர் கழக வாக்குசாவடி முகவர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முனியப்பன், பேரூர் செயலாளர் முரளி ஆகியோர் தலைமை தாங்கினர். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் புதிய வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் தி.மு.க. அமோக வெற்றி பெற வாக்குசாவடி முகவர்களின் பணி இன்றியமையாதது என்று கூறினார்.
கூட்டத்தில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட பொருளாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் சையத் முர்த்துஜா, ஒன்றிய செயலாளர்கள் பஞ்சப்பள்ளி அன்பழகன், கிருஷ்ணன், அடிலம் அன்பழகன், பேரூர் செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய அவைத்தலைவர் ராஜாமணி மற்றும் கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.