ஓசூரில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்


ஓசூரில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்
x

ஓசூரில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரியில் அடுத்த (ஜூன்) மாதம் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், பர்கூர் அசோகன், கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் பி.சி.சேகர், நாஞ்சில் ஜேசு, மாவட்ட இளைஞரணி தலைவர் அப்துர் ரகுமான், மாவட்ட மகளிரணி தலைவி சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில், கிருஷ்ணகிரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் சென்று கலந்து கொள்வது, சூளகிரி முதல் கிருஷ்ணகிரி பொதுக்கூட்ட திடல் வரை 50 ஆயிரம் காங்கிரஸ் கொடிகளை கட்டுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் தொடர்பாக, பேனர், கொடிகள், வாகனங்கள் போன்ற ஏற்பாடுகள் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதனால், கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், வட்டார தலைவர் சீனிவாச ரெட்டி மற்றும் மாவட்ட, வட்டார மாநகர நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story