நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் அடிதடி பிரச்சினை, பணம் மோசடி, நில பிரச்சினை உள்பட பல்வேறு புகார்கள் அடங்கிய சுமார் 50 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது காலதாமதம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு, சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார்.


Next Story