மின் குறைதீர் கூட்டம்


மின் குறைதீர் கூட்டம்
x

மின் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- காரைக்குடியில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை காரைக்குடி மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே காரைக்குடி கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Next Story