பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சேட்டு (எ) பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தப்பன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராம பகுதிகளில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் கொசுக்கள் மூலம் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பழுதடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும். சின்னாற்றில் இருந்து வீணாக வெளியேறும் மழைநீரை தேக்கி வைக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும். கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய ஒன்றிய குழு உறுப்பினர் நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


Next Story