பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
திருவாரூர்
கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணராஜன் தலைமையில் நடந்தது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பூபதி, துணைத் தலைவர் வினோதினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழு திட்டம் குறித்து பேசினார். இதேபோல் அம்மையப்பன், பவித்திரமாணிக்கம், பெரும்புகழூர், தேவர்கண்டநல்லூர், திருப்பள்ளிமுக்கூடல், கமலாபுரம், வண்டாம்பாளை உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது.
Related Tags :
Next Story