செம்மாண்டகுப்பம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு


செம்மாண்டகுப்பம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில்  தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செம்மாண்டகுப்பம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

தர்மபுரி

தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி சார்பில் உள்ளாட்சி தினத்தையொட்டி குண்டலப்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் தேவி அருள் ஞானசேகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர்கள் இடும்பன் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வட்டார வளர்ச்சி அலுவலக சாலை பணியாளர் சித்ரா கூட்டு நடவடிக்கைகளை பார்வையிட்டார். கூட்டத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட்டனர். இதில் அரசு துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ரேஷன் கடை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story