அக்லாம்பட்டி, கோக்கலை கிராமங்களில்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம்பிப்ரவரி 9-ந் தேதி நடக்கிறது


அக்லாம்பட்டி, கோக்கலை கிராமங்களில்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம்பிப்ரவரி 9-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செங்கோடு தாலுகா அக்லாம்பட்டி கிராமத்தில் கற்கள் குவாரி அமைக்க மக்கள் கருத்து கேட்பு கூட்டமானது கடந்த 23-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நிர்வாக காரணங்களினால் இந்த கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த இயலவில்லை. இந்த கருத்து கேட்பு கூட்டமானது பிப்ரவரி மாதம் 9-ந் தேதி காலை 10.30 மணி அளவில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது.

இதேபோல் கோக்கலை கிராமத்தில் கற்கள் குவாரிகள் அமைக்க மக்கள் கருத்து கேட்புக் கூட்டமானது 23-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கருத்து கேட்பு கூட்டமானது பிப்ரவரி மாதம் 9-ந் தேதி பிற்பகல் 3 மணி அளவில் அதே கூட்டரங்கில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story