பா.ஜனதா செயற்குழு கூட்டம்
ஓசூரில் பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூரில் பா.ஜனதா செயற்குழு கூட்டம் தின்னூர் அருகேயுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், மாநில செயலாளர் மலர்கொடி, மாநில நெசவாளர் பிரிவு தலைவர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் ஓசூர் முதல் ஜோலார்பேட்டை வரையிலான ரெயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story