டி.என்.பாளையம் அருகே கல்குவாரி அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு


டி.என்.பாளையம் அருகே கல்குவாரி அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு
x

டி.என்.பாளையம் அருகே கல்குவாரி அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டன்பாளையம் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் டி.என்.பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கோபி ஆர்..டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோ.உதயகுமார் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

கவுண்டன்பாளையம் பகுதியில் கல்குவாரி அமைவதால் கொங்கர்பாளையம் ஊராட்சி சுற்றியுள்ள மக்களுக்கு வேலை கிடைக்கும், கட்டிட பணிக்கான பொருட்களின் தேவைகள் பூர்த்தியாகும், இங்குள்ள கிராம மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் கல்குவாரி அமைய வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.

மற்றொரு தரப்பினர் கல்குவாரி அமைந்தால் கனிம வளம் பாதிக்கும், வீடுகள் விரிசலடையும், விவசாயம் பாதிக்கும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்று கூறினார்கள். இதனால் இருதரப்புக்கும் அடிக்கடி வாக்குவாதம், சலசலப்பு ஏற்பட்டது.

இருதரப்பு மக்களும் கூறிய அனைத்து கருத்துக்களும் வீடியோ பதிவு செய்யப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து கூட்டத்தை முடித்துவைத்தனர்.


Next Story