அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
ஓசூாில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
ஓசூர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாநகர வடக்கு பகுதி செயலாளர் அசோகா, மாவட்ட துணைசெயலாளர் மதன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிழக்கு பகுதி செயலாளர் ராஜி வரவேற்றார். கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, அமைப்பு செயலாளர் சிங்காரம் மற்றும் கலைமாமணி சிவன் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், ஓசூர் கூட்டுறவு வசதி சங்க தலைவர் நடராஜன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் சென்னகிருஷ்ணன், அக்ரோ தலைவர் ஹரிபிரசாத் மற்றும் நிர்வாகிகள் புஷ்பா வரதராஜ், சிவராம் உள்ளிட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. முடிவில், மேற்கு பகுதி செயலாளர் மஞ்சுநாத் நன்றி கூறினார்.