பாலக்கோட்டில்தூய்மை பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
தர்மபுரி
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான அறிவுரை மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை தாங்கினார். இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி தூய்மை பணியாளர்கள் மறுவாழ்வு சட்டம் 2013-ன்படி அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பாதாள சாக்கடை, செப்டிக் டேங்க் உள்ளிட்டவற்றை கைகளால் சுத்தம் செய்யக்கூடாது. எந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனை வழங்கினர். இதில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிந்திரன் மற்றும் அனைத்து தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story