பள்ளிபாளையத்தில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் நகர, ஒன்றிய பா.ம.க. செயற்குழு கூட்டம் பள்ளிபாளையம் கண்டிப்புதூரில் நடந்தது. மாவட்ட அமைப்பு செயலாளர் உமாசங்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் உதயகுமார், ஒன்றிய செயலாளர் மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். நகர தலைவர் ராஜா, ஒன்றிய நிர்வாகி ஜெயமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் மூர்த்தி, செயலாளர் சுதாகர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையோரம் 84 அடி உயரத்தில் கட்சி கொடிக்கம்பம் அமைக்க நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்பது, குமாரபாளையம் வட்டாரத்தில் மகளிர் போலீஸ் நிலையம், சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். மேலும் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சிக்கு சிலை அமைக்க நகராட்சி அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி செயலாளர் செந்தில் நாதன் நன்றி கூறினார்.