தர்மபுரி கோட்ட அளவிலானவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


தர்மபுரி கோட்ட அளவிலானவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 17 April 2023 12:30 AM IST (Updated: 17 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி கலெக்டர் கீதா ராணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் குரங்குகள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே குரங்குகளிடம் இருந்து வேளாண் பயிர்களை காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் தேவைகளுக்காக அரசு சார்பில் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் பணி எந்திரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுகுறித்த தகவல் இன்னும் ஏராளமான விவசாயிகளுக்கு தெரியவில்லை. எனவே, இது தொடர்பாக விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் அமைக்க போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்ட உதவி கலெக்டர் அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார். இதில் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story