திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா ஆலோசனை கூட்டம்


திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவில் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டதை விட அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இளங்கோ, பிரபாகரன், அர்சுனன், அருணா, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்கவேல், நாமக்கல் மாவட்ட வக்கீல் பிரிவு துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, நெசவாளர் அணி அமைப்பாளர் சரவண முருகன், முத்து கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அர்த்தநாரீஸ்வரர் தேரை அவர்கள் பார்வையிட்டனர்.


Next Story